விவசாயிகளின் வாழ்வியலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் The American corner

விவசாயம்

புராதன காலம் தொட்டு இன்றைய காலம் வரை விவசாயம் மக்களின் வாழ்வியலோடு கலந்து பிரதான அம்சமாக விளங்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது.

அவர்களின் பிரதான வாழ்வியல் முதலீடுகள்

நெற்பயிர்சசெய்கை

விவசாயிகளின் முக்கிய வாழ்வாதார முதலீடாக நெற்பயிர்ச்செய்கை விளங்குகின்றது.இது சிறுபோகம் பெரும்போகம் என இரு கால கட்டங்களில் பயிரிடப்படுகிறது. நெற்பயிர்ச்செய்கை உள்நாட்டு உற்பத்தி வளங்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் உதவுகோலாக அமைகிறது.

வெங்காயச்செய்கை

இது விவசாயிகளின் சிறுகால முதலீடாக அமைகிறது. இப் பயிர்ச்செய்கை குறுகிய கால அளவில் அதாவது மூன்று மாத கால அளவுகளில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும். இது ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு விவசாயிகள் முதலீட்டு தொகைக்கு சந்தைப்படுத்த முடியாத அவல நிலை காணப்படுகிறது.

மிளகாய் பயிர்ச்செய்கை

இது உள்நாட்டு விவசாய பயிர்ச்செய்கைகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. இது ஆறு மாத கால அளவான பயிர்ச்செய்கை ஆகும்.

விவசாயி செ.போல் துரைநாயகம்

விவசாய துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க விவசாயியாக காணப்படுகிறார். இவருடன் மேற்கொண்ட நேர்காணலின் படி இவர் பதினேழு வயது தொடக்கம் விவசாயம் செய்து வருவதாகவும் இருமுறை வீட்டு தோட்ட முதலீட்டாளர்களுக்கான விருதை பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். இவர் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளாக குறிப்பிடுவது, இன்றைய நாளில் கிருமிநாசினிகளின் விலை உயர்ந்து இருப்பதும் நாளந்த தொழிலாளர்களின் கூலி அதிகரித்து வருவதும் பிரதான சவால்களாக குறிப்பிடுகின்றார்.

விவசாயிகளின் நிலம் பண்படுத்தல் முறைகள்

இயற்கை முறை

அதாவது விவசாயிகளின் நிலப்பண்படுத்தல் முறைகளில் இயற்கை முறையாக எருது மாட்டின் மூலம் நிலத்தை உழும் முறை காணப்படுகிறது. இவ் முறையை பயன்படுத்துவதில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளாக நீண்ட நேரமும் மனித உடலுழைப்பு அதிகமாக தேவைப்படுகிறது.

செயற்கை முறை

இவ் முறை உழவு இயந்திரம் மூலம் நிலத்தை உழும் முறை ஆகும். இம் முறையில் இலகுவாக ஒரு நிலத்தை மனித உழைப்பு இன்றி மேற்கொள்ள முடியும்.

மிருக வளர்ப்பு

விவசாயிகளின் முக்கியமான வாழ்வாதாரமாக மிருக வளர்ப்பு அமைகின்றது. மிருக வளர்ப்பின் மூலம் விவசாயத்தை இலகு படுத்திக்கொள்ளவும் இயற்கை சேதன பசளைகளை பெற்றுக்கொள்ளவும் இது உதவுகிறது.

விவசாயிகள் தமது வயல் நிலங்களில் அகற்றப்படும் களைகளை விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துவர்.

விவசாயிகளின் பொழுதுபோக்கு அம்சங்கள்

விவசாயிகள் தமது பொழுதுபோக்கு அம்சமாக காளை மாடுகளை வளர்த்து சவாரி செய்வதை பொழுது போக்காக கொள்ளுவர்.

விவசாயிகளின் வாழைப் பயிர்ச்செய்கை

கோப்பாய் பிரதேசத்தில் பிரதான விவசாய முதலீடாக வாழை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர். இதுவே இவர்களது பிரதான வாழ்வாதார முதலீடு ஆகும்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள்

இயற்கை அனர்த்தங்கள்

வெள்ளம்

விவசாயத்துக்கு தேவையான மழைவளம் அதாவது மழையை பிரதானமாக எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச்செய்கைக்கு அதிகமான மழை வளம் காணப்படுவதால் பயிர் அழியும் நிலை ஏற்படும். இது பிரதானமாக நெற்பயிர்ச்செய்கையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக காணப்படுகின்றது.

பெரும்போகத்தை பிரதானமாக மேற்கொள்ளும் விவசாயிகள் மழை வளம் இன்மையாலும் நெற்பயிர் அழியும் நிலை ஏற்படுகின்றது. இது விவசாயிகள் எதிர்நோக்கும் சவாலாக காணப்படுகின்றது.

வறட்சி

மழை வளம் மிக குறைவாக காணப்படும் நேரங்களில் விவசாயிகளின் பயிரிடல் முயற்சிகள் மிக பெரிய சவாலாக காணப்படுகின்றது.

சந்தைப்படுத்தலில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

உள்நாட்டில் பிரதான வாழ்வாதாரமாக விவசாயத்தை செய்து வரும் விவசாயிகள் சந்தைப்படுத்தலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் (அதாவது வெங்காயம் போன்றவை) உள்நாட்டு விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் கேள்வித்தொகை குறைவாக காணப்படுகின்றது. உள்நாட்டு வியாபாரிகள் விவசாயிகளின் முதலீடுகளை சுரண்டுவதால் விவசாயிகள் பெரும்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.