இயேசுவின் வருகை எப்போழுது?

இயேசுவின் வருகை எப்போது?

கிபி30ல் இயேசு தம்முடைய வருகையை குறித்து இப்படி சொன்னார்.

மத்தேயு 16:27 -28

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலமும் முதல் நூற்றாண்டு தான்.

Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

இரண்டு வேத பகுதிகளுமே ஒரே வருகையை பற்றியதே. தான் வரும் போது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார் என்று பார்க்கிறோம்.

இப்போழுது இதை வாசியுங்கள். கிபி30ல் இயேசுவின் சொந்த வார்த்தைகள்.

மத்தேயு 16:28 ( தமிழ் பொது மொழிப்பெயர்ப்பு )

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 16:28 ( Easy to Read Version )

நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.

மத்தேயு 16:28 ( தமிழ் கத்தோலிக் மொழிப்பெயர்ப்பு )

நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்" என்றார்.

வேண்டுமானால் இந்த வசனத்தை ஆங்கிலத்திலும் வாசியுங்கள்.

தான் வரும் வரை அங்கு நின்றுக்கொண்டிருந்தர்வர்கள் உயிரோடு இருப்பார்கள் என்று இயேசு சொன்னாரே. அப்படியென்றால் அவரின் வருகை முதல் நூற்றாண்டிலே நிறைவேறியிருக்க வேண்டுமே.

சிந்தியுங்கள் நன்பர்களே!

Created By
Prabhu Antony
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.