கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா? Munneswaram

மணி

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.

ஏன்? எதற்கு?

ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.

சுவாரஸ்யம்!

கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம், கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.

தனித்துவ ஒலி!

கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.

கூர்மையான சப்தம்!

கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 – 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது.

எதிர்மறை ஆற்றல்!

மேலும், இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.