யார் அந்திகிறிஸ்து?
அந்திகிறிஸ்துவை பற்றி யோவான் சொல்வதை கவனியுங்கள்
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:23
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1 யோவான் 4:3
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
2 யோவான் : 1 : 7
அந்திகிறிஸ்துவை குறித்து நவீன கால கிறிஸ்தவர்களின் கூற்றை கவனியுங்கள்.
திடீரென்று எதிர்காலத்தில் தோன்றுகிற ஒரு மனிதன்;
உலகத்தின் முடிவில், சில கிறிஸ்தவர்கள் மட்டும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்கள். மற்றவர்கள் கைவிடப்படுவார்கள். அப்படி கைவிடபட்டவர்களை ஏமாற்ற வருவான்.
அப்படி வருகிறவன் - இவர்களில் ஒருவனாயிருப்பான் என்று உரைத்தார்கள்.
அட்டிலா, நெப்போலியன், போப், மார்ட்டின் லூதர், முகமது, ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஹென்றி கிஸ்ஸிங்கர்; மிகைல் கோர்பச்சேவ். இன்னும் பலர்.
வேதம் சொல்லுகிற அந்திகிறிஸ்து வேறு, கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிற அந்திகிறிஸ்து வேறு.
இப்போழுது முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட யோவானுடைய வார்த்தைகளை கவனியுங்கள்.
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 1 யோவான் 4:18
யோவான் சொல்லுவதை கவனித்திர்களா?
முதல் நூற்றாண்டை பார்த்து - இது கடைசிக்காலமாயிருக்கிறது
ஒரு அந்திகிறிஸ்து என்று சொல்லாமல் - இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்;
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அந்திகிறிஸ்துகளை பார்த்து - இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
அனேகர் வேதம் சொல்லுவதை கவனிப்பதில்லை. கவனித்திருந்தால் குழப்பமே இல்லை.