உலகமா அல்லது யுகமா?

நாம் வாழ்வது கடைசிக்காலமா?

இல்லை. முதல் நூற்றாண்டு இஸ்ரவேலர்களுக்கு தான் கடைசி காலம். கடைசிக்காலம் என்று சொல்லுவதை விட காலத்தின் கடைசி என்று தான் வேதம் சொல்லுகிறது. It is the time of the end not the end of time.

மத்தேயு 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

அனேகர் இயேசுவிடம் சிஷர்கள் உலகத்தின் முடிவை குறித்து கேட்டதாக நினைத்து கொண்டு உலகமே அழியும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

வேதாகமம் எபிரேய கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருகிறது என்பதை எப்போழுது கருத்தில் கொள்ளவேண்டும்.

கிரேக்க மொழியில் உலகம் என்ற வார்த்தையை கவனியுங்கள்.

G165 (Strong) αἰών aiōn. - age; தமிழில் யூகம்.

யூகம் அழிவதை / முடிவதை தான் சிஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.

இயேசு திரும்பவும் வரும் போது, நாம் வாழும் இந்த உலகத்திற்க்கு முடிவு வரும் என்று அனேகர் நம்புகின்றனர்.

அவர் திரும்பவும் வருவது, உலகத்தை (kosmos) அழிக்க அல்ல, யுகத்தை (aion) முடிவுக்கு கொண்டுவர. பழைய உடன்படிக்கையின் யூகத்திற்க்கு முடிவுக்கு கொண்டுவரவே, அவர் திரும்ப வந்தார்.

கடைசிக்காலத்தைப் பற்றி பேசுகிறவர்கள், உடன்படிக்கைக்கு கடைசிக் காலம் என்பதை ஏன் அறிவதில்லை? வேதம் உடன்படிக்கையின் புஸ்தகம் என்பதை முதலில் அறியாவிட்டால், நாம் செய்யும் அத்தனை வியாக்கியானமும் தவறாகவே இருக்கும்.

உலகம் அழியுமா?

இதை வாசியுங்கள்.

சங்கீதம் 78:69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.

சங்கீதம் 104:5 பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

Ecc 1:4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

பிறகு எதற்கு கடைசி காலம்?

எபிரேயர் 8:7

அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

எபிரேயர் 7:18

முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

எபிரேயர் 7:19

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை...

Heb 9:9 அந்தக் கூடாரம் ....... செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.

எபிரேயர் 8:13

புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

பழைய உடன்படிக்கையும், அதின் அடையாளங்களாகிய தேவாலயமும், நியாயப்பிரமானங்களும், பலிகளும், உருவழிந்து போகிற காலத்தை தான் கடைசிக்காலமென்று வேதம் சொல்லுகிறது.

பழைய உடன்படிக்கை எப்போது முடிவடைந்தது?

கிபி 70. ரோமர்களால் தேவாலயம் இடிக்கப்பட்டபோது பழைய உடன்படிக்கையும் முடிவுக்கு வந்தது. இயேசு சொன்னதை திரும்ப திரும்ப வாசியுங்கள்

Created By
Prabhu Antony
Appreciate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.