Loading

Why did I start the FM Journey Tamil Testimony by RJ Karkee

www.karkee.co

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,

இந்த சாட்சி உங்களக்கு பிரியோஜனமாய் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்.

ஏன் ரேடியோவில் பேச ஆரம்பித்தேன் ?

பலரும் கேட்ட கேள்வி !!!

படிக்கும் காலத்தில், பேச்சு போட்டி பாடல் என அநேக போட்டிகள் நடக்கும் ,

நானும், சரி ஏதாவது போட்டில கலந்துக்கலாம்னு மைக்க எடுத்தா .....

ஒரே அமைதி .. என்னடான்னு பாத்தா பவர் போயிடுச்சி .... அட என்ன இது கொடுமைனு விட்டுட்டேன் ...

scroll down

இதே போல் இரண்டு மூன்று தரம் நடக்கவே , மன உளைச்சலுக்கு ஆளான நான் இனி மைக்க தொட கூடாதுன்னு முடிவு எடுத்தேன்....

ஆண்டுகள் கடந்தது .......

கர்த்தர் என்னை அழைத்தார் .....

அப்பவும் எனக்கு மைக் புடிச்சி பேசணும்னா பயம் ...எங்க பவர் போய்டுமோ, எல்லாரும் சிரிச்சிடுவாங்களோனு ... அதுனால ஸ்டேஜ்ல பேசுற நெறய வாய்ப்புகள் வந்ததும் அவொய்ட் பண்ணிட்டேன் ....

ஒரு நாள் வந்தது, நானும் என் தோழி ஸ்வேதாவும் ஆண்டவர் எங்கள் வாழ்வில் செய்த நன்மையான காரியங்களை பற்றி பேசி கொண்டு இருந்தோம் ...

நான் என்னுடைய சாட்சிகளை சொல்லிக்கொண்டு இருக்கும் பொது, இந்த மைக் விஷயத்தை பத்தி சொன்னேன் !! குபீர்னு சிரிச்சிட்டு அவ ஒரு விஷயம் சொன்ன .... எனக்கு தூக்கி வாரி போட்ருச்சு !!!

"ஆண்டவர் உங்களை ஏற்கனவே பிரித்து எடுத்துவிட்டார், அவர் உங்கள விஷேசித்தவளா அபிஷேகம் பண்ணி இருக்கார் , அப்படி இருக்கும் போது எப்பயோ நடந்த விஷயத்தை நெனச்சு இப்பவும் அப்படியே மைக்க புடுச்சா பவர் போயிடும்னு பயந்துட்டு இருந்திங்கனா ஆண்டவர் உங்கள ஆளுகை செய்யல, பிசாசு தான்னு" சொன்னா !!!

scroll down

நான் அப்படியே அமைதியாய்ட்டேன் , மனசுக்குள்ள ஏசப்ப என்ன மன்னிச்சிடுங்க , உங்கள தெரிஞ்சும் நான் எப்படி இதை ஒரு பெலவீனமா நினைக்குறேன் , என்னை பெலப்படுத்துற நீங்க என் கூட இருக்கும் போது என்னால எத வேணும்னாலு பண்ண முடியும்னு முடிவெடுத்தேன் !!!

அப்போதான் யோசிச்சேன், இத ஓவர் கம் பண்றதுக்கு என்ன பண்ணலாம்னு ?

எனக்கு ஒரு ஆசை , நான் ஆண்டவர் ஆளுகைலதான் இருக்கேன் எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணனும், அப்பதான் என்னோட சின்ன வயசு ஆசை எனக்கு நியாபகம் வந்தது.

ஒரு ரேடியோ ஸ்டேஷன் ஸ்டார்ட் பண்ணணும்ன்றது இல்லனா ஒரு RJ வ இருக்கணும்ன்றது தான் அது!

எப்பயோ நான் ஆசைப்பட்டது, இப்ப ஏன் செய்ய கூடாதுனு நெனச்சேன், அதுக்கு ஏத்தமாறியே கர்த்தர் என்னை வைத்திருக்கிற சபையிலே உத்தமியே FM செயல்பாட்டில் இருந்தது .

நான் என்னுடைய போதகரிடம் இதை பற்றி சொன்னபோது , ரொம்ப உற்சாகமா என்னை encourage பண்ணாங்க .

சந்தோஷத்தோட ஆரம்பிச்சேன் இந்த பயணத்தை .....

மைக் பிடிச்சா பவர் போயிடும்னு பயந்த என்னை ... அதே மைக்ல அநேக episodes பேச வைச்சாரு என் ஆண்டவர்.

இதை படிக்குற , தம்பி, தங்கை, அக்கா அண்ணா,

தேவன் உங்க வாழ்க்கைல ஒரு நோக்கத்தை வச்சு இருக்காரு ...

என்னால இது முடியாது, நா இத சொதப்பிடுவேன்னு , நா கை வச்சா விளங்காதுனு நீங்க எத நனைக்குறிங்களோ அதை ஆண்டவர்கிட்ட ஒப்பு கொடுங்க...

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான் பழையவைகள் எல்லாம் ஒழிந்துப்போயின எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5 : 17)

நம் ஆண்டவர் எல்லாவற்றயும் புதிதாய் மாற்றுவார் !!!

என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு” பிலி 4:3

கர்த்தர் நம்முடைய பெலனாய் இருக்கும் போது , நம்மளால செய்ய முடியாத காரியம்னு ஒன்னு இல்லவே இல்ல !!

சரி, இப்போ ஜெபம் பண்ணுங்க, எதுல நீங்க குறைவாய் காணப்படுகிறீர்களோ அதுல ஆண்டவர் ஒரு நிறைவை தருவார்!!!!

நன்றிகள் !!!

RJ KARKEE

SCROLL DOWN FOR VIDEO

I have shared my testimony in this episode!!
Created By
RJ KARKEE
Appreciate

Credits:

Created with images by Jonathan Velasquez - "Condenser microphone in a studio" • Elliot Sloman - "Microphone in a stand" • Alphacolor 13 - "Headphones on a loudspeaker" • fancycrave1 - "headphones music sounds listening entertainment audio musical" • tianya1223 - "mic recording record"