Loading

Hotdog உணவுப்பொருள் எப்படித் தயாரிக்கப்படுகிறது?

நறுக்கப்பட்ட பன்றி இறைச்சி, நறுக்கப்பட்ட கோழி,
உப்பு,
உணவுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டார்ச் எனும் மாவுச்சத்துப் பொருள், சோளக்கருதைக் கொண்டு செய்யப்பட்ட பாகு,
இரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
கலவை அரைக்கப்பட்டு மாவாகிறது. திடத்தன்மையைக் கொண்டிருக்க மாவுடன் தண்ணீர் சேர்க்கப்படுகிறது.
அதன்பின் மாவு செல்லுலோஸ் உறைக்குள் ஏற்றப்படுகிறது.
தி சயின்ஸ் சேனல் என்ற நிறுவனத்தின் கூற்றுப்படி ஒரு காற்பந்துத் திடலை 2 முறை மூடக்கூடிய அளவிலான Hotdog உணவை 35 விநாடிகளில் தயாரிக்கலாமாம்.
உறைக்குள் ஏற்றப்பட்டபிறகு அவை சமைக்கப்பட்டுக் குளிர்விக்கப்படுகின்றன.
இறுதியாக அவை உணவகங்களுக்கும் கடைத்தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
அதை வாங்கி விரும்பி உண்போர் ஏராளம். ஆனால் அது ஆரோக்கியமான உணவு என்று சொல்லமுடியாது.
ஒரு Hotdogஇல் 204 கலோரிகளும் 18 கிராம் கொழுப்பும் அடங்கியுள்ளன. அது மட்டுமல்லாமல்

2ஆம் வகை நீரிழிவு நோய்,

இதய நோய்,

புற்றுநோய் ஆகியவை வருவதற்கான அபாயத்தை அவை அதிகரிக்கும்.

Hotdog உணவு நீண்டநாள்கள் நீடிக்கவும் அதற்கு வண்ணமூட்டவும் நைட்ரேட்ஸ் எனும் உணவுப் பதனப்பொருள் சேர்க்கப்படுகிறது.
அது புற்றுநோய் உண்டாவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Credits:

Created with images by Robert-Owen-Wahl - "hot dog beef bread" • onefox - "salt nature eat" • chefkeem - "sweet-potatoes yams vegetables" • stevepb - "maize mealies corn" • PublicDomainPictures - "lab research chemistry" • 41330 - "pack dog hot" • Victor Garcia - "untitled image" • PublicDomainPictures - "pork snack meat" • BHarner30 - "barbecue sausage flame" • ElyPenner - "truck semi tractor" • Tiara Aracama - "untitled image" • Telecouse - "hot dog eat sausage" • TesaPhotography - "diabetes blood finger" • PDPics - "cancer newspaper word" • valelopardo - "doctor tomograph i am a student"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.