நின்னையே ரதியென்று... யாழ்ப்பாணம்

தெருமூடிமடம்

கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது. பருத்தித்துறையில் மாத்திரம் காணப்படுகின்றது.பண்டைய காலங்களில் நீண்டதூரம் பயணிப்பவர்கள் தங்கி இளைப்பாறிச் செல்வதற்காக கட்டப்பட்டது.தங்களது மாடுகளை அவிழ்த்து அவற்றிற்கு தண்ணீர் கட்டக்கூடிய ஒரு இடமாக அமைந்திருந்தது.

இது அருகிலிருக்கும் சிவன் கோயிலால் பராமரிக்கப்படுகிறது.கற்கள் மிகச்சிறப்பாக பொழியப்பட்டுள்ளது.மாட்டுவண்டி,குதிரை வண்டி காலத்திற்குரிய படைப்பு.முன்னர் உயரம் குறைவாக ஓலையால் வேயப்பட்டிருந்தது. எத்தகையகாலத்திலும் குளிர்ச்சியை தரக்கூடியது. தற்போது ஓட்டினால்வேயப்பட்டுள்ளது.தாகத்தை தணிப்பதற்காக இரு அந்தங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும்.இதனூடாக வேகமாக மோட்டார் வண்டியில் பயணிக்கின்றார்கள்.அது ஆபத்தானது.எனவே அரசாங்கம் இரு மருங்கிலும் வேகத்தடுப்பு இட்டால் நன்றாக இருக்கும்.

நெடுந்தீவு

நெடுந்தீவின்தென்கிழக்குபகுதியில்தொட்டாரம்எனஅழைக்கப்படும்பகுதியின்கடற்கரையைஅண்டியபகுதியில்இக்கோபுரம்உள்ளது.பிரித்தானியஅரசிவிக்டோரியாமகாராணியின்ஆட்சிகாலத்தில் 1902ல்கட்டப்பட்டதாகும்.இவரதுஆட்சிகாலத்தில்கட்டப்பட்டதனால்இராணிகோபுரம் (Queen Tower) எனஅழைக்கப்பட்டது.அடிப்பகுதிஅகலமாகவும்மேல்நோக்கிசெல்லசெல்லநுனிப்பகுதிகுறுகியதாகவும்காணப்பட்டுஅதன்மேலேதுவாரமும்காணப்படுகின்றது.கடற்பயணங்களையும்நாடுகாண்பயணங்களையும்கடற்கலங்களில்தொழில்செய்வோரையும்குறித்தஇடத்தைஅடையாளம்காட்டும்வெளிச்சவீடுஅல்லதுபுகைவீடுஎனவும்வாய்மொழிக்கதைகள்பரவிஉலாவந்தவண்ணமேஉள்ளனஇந்தவகையில்கப்பலுக்குவழிகாட்டும்இந்தவெளிச்சவீட்டின்உயரமானது 23 அடிஅல்லது 5 மீற்றர்எனவும்இதன்ஒளிச்சமிக்ஞையானதுஇரவில்தொடர்ந்துஎரியும்வண்ணம்காணப்படுவதாகஅமைந்துள்ளது. இன்றுஇக்கோபுரம்அழிவடைந்துபாழ்பட்டுள்ளது.

தென்மராட்சி

தென்மராட்சியில் சரசாலை என்னும் இடத்தில் பரவிக்காணப்படும் கண்டல் நிலப்பகுதி. கிட்டத்தட்ட 600 ஹெக்டயர் அளவில் காணப்படுகிறது. நீர் நிலப்பகுதியை தாவரங்கள் மூடிக்காணப்படுவதால் நீர் ஆவியாகும் தன்மை குறைவு.யாழ்ப்பாணத்தின் குளிர்மையான பகுதிகளில் ஒன்றாக காணப்படுகிறது.பறவைகள் சரணாலயத்துக்குரிய. சிறப்பியல்புகளையும் கொண்டிருக்கிறது.இவ் விடத்தில்சவாரித்திடல் காணப்படுகிறது. அங்கு மாட்டுவண்டிச்சவாரி நடைபெறுகிறது.கண்டல் நிலத்தாவரங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.

copy right= தினமனி

நவாலி

நவாலி சங்கரத்தை கோயிலடியில் ஆவுரஞ்சிக்கல்லை பார்க்க கூடியதாக இருக்கும்.அதற்கு முன்னால் மாடுகள் நீர் அருந்தக்கூடியவாறான கேணி அமைப்பு காணப்படுகிறது.இவ்விடங்களில் பழங்கால கிணற்று அமைப்பு முறைகளையும்,கேணி அமைப்பு முறைகளையும் காணக்கூடியதாக இருக்கும்.

ஊர்காவற்றுறை

அதிகளவான தேவாலயங்கள் காணப்படுகின்றன . துறைமுக நகரமாக காணப்பட்டதனால் அடர்த்தியான நகரமாக காணப்பட்டது.போர்த்துகேய,ஒல்லாந்த காலத்து கட்டடங்கள் காணப்படுகின்றன.

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.