Loading

Notre Dame தேவாலயத்தின் சிறப்பு அம்சங்கள்

1. சன்னல்கள்

ரோஜா வடிவில் உள்ள தேவாலயத்தின் மூன்று சன்னல்கள் 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை.

84 கண்ணாடித் துண்டுகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு ரோஜா வடிவச் சன்னல் சுமார் 13 மீட்டர் விட்டம் கொண்டது.

2. இரட்டைக் கோபுரங்கள்

68 மீட்டர் உயரமுள்ள கோபுரங்ள் தேவாலயத்தின் சிறப்பு அம்சம்.

அதன் உச்சியிலிருந்து பாரிஸ் நகரைப் பருந்துப் பார்வையில் பார்த்து ரசிக்கலாம்.

1200ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோபுரங்களின் கட்டுமானப் பணி 1250ஆம் ஆண்டே முடிவுற்றது.

3. Gargoyle சிற்பங்கள்

புராணங்களில் இடம்பெறும் Gargoyle கதாபாத்திரங்கள் தேவாலய மேற்கூரைகளில் அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன.

புகழ்ப்பெற்ற 'Stryge' gargoyle சிற்பம் பாரிஸ் நகரை காண்பதைப்போல் தோற்றமளிக்கும்.

4. மணிகள்

தேவாலயத்தில் மொத்தம் 10 மணிகள் உள்ளன. தேவாலயத்தைக் கட்டி 850ஆம் ஆண்டை முன்னிட்டு 2013ஆம் ஆண்டில் புது மணிகள் செய்யப்பட்டு தேவாலயத்தில் பொருத்தப்பட்டன.

படங்கள்: Cristian Bortes from Cluj-Napoca, Romania. Myrabella / Wikimedia Commons

5. கூம்பு வடிவக் கூர்நுனி

தீயில் எரிந்து விழுந்த கூர்நுனி 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிரஞ்சுப் புரட்சியின் போது அகற்றப்பட்ட கூர்நுனி மீண்டும் 1860களில் கட்டப்பட்டது.

6. அரும் பொருள்கள்

Passion of Christ எனப்படும் ஏசுபிரானின் இறுதிக் காலத்தைச் சேர்ந்த சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி, முள்கிரீடம் ஆகியவை அந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தன.

Notre Dame தேவாலயத் தீச் சம்பவம் பற்றி மேலும் தகவல் பெற: https://seithi.mediacorp.sg/

Notre Dame தேவாலயத் தீச் சம்பவம் பற்றி மேலும் தகவல் பெற:

https://seithi.mediacorp.sg/

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.