வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலம் எது? ( இரண்டாம் பாகம் )

வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலம் எது? ( இரண்டாம் பாகம் )

வெளிப்படுத்துதல் புஸ்தகம் எழுதப்பட்ட காலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம்.

கிபி 70க்கு முன் அது எழுதப்பட்டிருந்தால் இஸ்ரவேளுக்கு சொல்லப்பட்டபடி நியாயத்தீர்ப்பு நடந்தேறியிருக்க வேண்டும். ஆனால் கிபி 70க்கு பிறகு எழுதப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் தான் இயேசுவின் வருகையும் இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பும் நிறைவேறும்.

இந்த புத்தகத்தை யோவான் எப்போழுது எழுதினார் என்று பல வேறுப்பட்ட கருத்துகள் உள்ளன.

இது “கிபி 70க்கு முன்” அல்லது "கிபி 70க்கு பிறகு" எழுதப்பட்டதா?

கிபி 70 பிறகு எழுத பட்டிருந்தால்?

கிபி 130-202ல் வாழ்ந்தவர் ஐரேனியஸ், அவருடைய குறிப்புகள் மட்டுமே கிபி 95 பிறகு யோவான் எழுதி இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

கிபி 70க்கு முன் எழுதப்பட்டாதா?

ஆம் வேதமே அதற்கு சான்று.

கிபி 70க்கு முன் எழுதப்பட்டது என்பதற்கு வெளிப்படுத்தின புஸ்தகத்திலேயே பல ஆதாரங்கள் உண்டு. வெறும் வெளிப்டுத்துதல் புஸ்தகம் மாத்திரமல்ல எல்லா புதிய ஏற்பாட்டு புஸ்தகங்களும் கிபி 70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்குள் எழுதி முடிக்கப்பட்டது.

இயேசு சொன்னதை கவனியுங்கள்

லூக்கா 21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

4, பூமியின் கோத்திரத்தார்.

அனேகர் வெளிப்படுத்துதல் புஸ்தகத்தின் முக்கிய வசனமாக கருதுவது இந்த வசனம் தான்.

வெளிப்படுத்துதல் 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

இங்கே பூமியின் ghay (#G1093) என்ற கிரேக்க வார்த்தையும், கோத்திரத்தாரெல்லாரும் phulē (#G5443) என்ற கிரேக்க வார்த்தையும் பயன்படுத்த பட்டிருக்கிறது.

ஒலிவமலை சொற்பொழிவின் போது, இயேசு இப்படி சொன்னார்,

24:30 அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

இங்கேயும் பூமியிலுள்ள ghay (#G1093) என்ற கிரேக்க வார்த்தையும், கோத்திரத்தாரெல்லாரும் phulē (#G5443) என்ற கிரேக்க வார்த்தையும் பயன்படுத்த பட்டிருக்கிறது.

இந்த இரண்டு வசனங்களும் ஒரே சம்பவத்தை ( எருசலேமின் விழ்ச்சியை) பற்றியே பேசுகிறது.

இதை கவனியுங்கள்.

வெளிப்படுத்துதல் 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

அவரை குத்தினவர்கள் யார்?

எழுத்தின் படியே ரோம போர்சேவகர்கள் இயேசுவை குத்தினவர்கள். மேலும் அப்போஸ்தலர்களும், யூதர்களே இயேசுவை கொலை செய்தவர்கள் என்று சொன்னதை பாருங்கள்.

அப்போஸ்தலர் 2:36-27

ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும்

அப்போஸ்தலர் 2:23

அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்

அப்போஸ்தலர் 7:52

இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.

அது மாத்திரமா?

யார் இந்த பூமியின் கோத்திரத்தார்?

பூமியின் கோத்திரத்தார் என்பது முழு உலகமென்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெளிபடுத்தின விஷேசத்தில் பூமி (ghey) என்றும், கோத்திரத்தார் (phule) என்ற கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்துகிறதை நாம் கவனிக்க வேண்டும்.

பூமியின் கோத்திரத்தார் என்றால் இஸ்ரவேல் மக்களையும் அவர்களின் கோத்திரத்தரையும் குறிக்கிறது.

மேலும் வேதமே வேதத்தை விளக்குகிறது என்பதை ஒருபோதும் நாம் மறக்க கூடாது.

சகரியா 12:10-14

கவனித்திர்களா?

கடைசிக்காலத்தை குறித்து சகரியா முன்னறிவித்த போது இஸ்ரவேலின் குடும்பங்கள் ( கோத்திரத்தார் ) அந்நாட்களிலே அழுது புழம்புவார்கள் என்று முன்னறிவித்தார். இதை தான் வெளிப்படுத்துதலில் வாசிக்கின்றோம்.

எல்லா கண்களும் அவரை கானும், பூமியின் கோத்திரத்தார் எல்லோரும் அவரை காண்பார்கள், அவரை குத்தினவர்கள் அவரை காண்பார்கள் என்ற வாக்கியங்கள் இஸ்ரவேலர்களையும் அவர்களின் கோத்திரத்தையும் பற்றி தான் யோவான் எழுதுகிறார்.

சகரியாவின் திர்க்கதரிசனத்தின் படி அந்த பூமியின் கோத்திரத்தார் இஸ்ரவேல் தேசமே.

5, வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட பெண்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வெளிப்படுத்துதல் 17 மற்றும் 18 அத்தியாயங்களில் சொல்லப்பட்ட பெண்.

யார் அந்த பெண்?

வெளிபடுத்துதல் 17:6

அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வெளிபடுத்துதல் 18:24

தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

வெளிபடுத்துதல் 17:5

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

அந்த பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டவள் என்றும், மகா பாபிலோன் என்றும், வேசி என்றும் அழைக்கப்படுகிறாள்.

மேலும், அந்த நகரம் அழிந்துபோனது என்றும் வாசிக்கின்றோம். இதை பாருங்கள்.

வெளிப்படுத்துதல் 18:20, 21

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.

அவள் நியாயம் திர்க்கப்பட்டால் என்றும் காணாப்படாமல் போனால் என்றும் யோவான் சொல்லுகிறாரே. யார் அவள்?

வெளிபடுத்துதல் 17:18

நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

அந்த பெண் வேறு யாருமல்ல, எருசலேம் நகரமே.

யோவான் அந்த நகரத்தை பற்றி இப்படி சொன்னார். இதை வாசியுங்கள்.

வெளிப்படுத்துதல் 11:8

அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நகரம் என்றும், அந்த நகரத்தை சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கிறார்.

ஆகவே எருசலேம் நகரம் , மகா பாபிலோன் என்று அழைக்கப்படுவது பெரிய ஆச்சரியமில்லை.

வெளிப்படுத்துதலில் யோவான் எருசலேம் நகரத்தை சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கிறாரே. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏசாயா இஸ்ரவேலர்களை அப்படி தான் அழைத்தார்.

பின் வரும் வசனங்களை கவனமாக வாசியுங்கள்.

ஏசாயா 1:1

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்.

யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம். அனால் இப்பொழுது அந்த நகரத்தின் மக்களை எப்படி விவரிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

ஏசாயா 1:10

சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.

கவனித்திர்களா?

சோதோமின் அதிபதிகளே, கொமோராவின் ஜனமே என்று இஸ்ரவேலர்கள் எசாயாவினால் அழைக்கப்பட்டனர்.

ஏசாயா 1:21

உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.

மேலும் அந்த நகரத்தை வேசி என்றும் ஏசாயா அழைக்கிறார்.

எரேமியா சொல்வதை கவனியுங்கள்,

எரேமியா 23:14

எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.

இஸ்ரவேலர்களை கர்த்தர் எப்படி அழைக்கிறார் பாருங்கள்.

"அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்."

இப்போழுது திரும்பவும் இதை வாசியுங்கள்.

வெளிப்படுத்துதல் 18:20, 21

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.

(எருசலேம் நகரம்) அவள் நியாயம் திர்க்கப்பட்டால் என்றும் காணாப்படாமல் போனால் என்றும் யோவான் கூருகிறார்.

இதை தான் இயேசு முன்னரே சொல்லியிருந்த்தார்.

லூக்கா 13:34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

எருசலேம், திர்க்கதரிசிகளை கொலை செய்தவர்கள் என்றும் அந்த நகரம் பாழாக்கி விடப்படும் என்று இயேசு முன்னரே சொல்லியிருந்தார்.

இதை படியுங்கள்.

மத்தேயு 23:29 -36

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:

எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.

சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?

ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;

நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கவனித்திர்களா? யாரைப்பற்றி இயேசு சொல்கிறார்?

இஸ்ரவேல் மக்களை தான் அப்படி கூறுகிறார். உலகத்தை பார்த்து, உலகில் இருக்கும் எல்ல நகரத்தையும் பார்த்து இப்படி சொல்லாமல், எருசலேம் நகரத்தை பார்த்து தான் இயேசு இப்படி சொன்னார்.

மத்தேயு 23:37

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே!

ஆம் அந்த நகரம் தான் பாழக்கப்பட்டது.

மத்தேயு 23:38

இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

இதை தான் வெளிப்படுத்துதலில் யோவான் இப்படி சொன்னார்.

வெளிப்படுத்துதல் 18:20, 21

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

இந்த எருசலேம் நகரமும் அதின் மக்களும் கிபி 70ல் நடந்த யூத ரோம போரின் போது பாழக்கப்பட்டனர்.

நகரம் பாழக்கப்பட்ட பிறகு வெளிப்படுத்துதல் எழுதப்பட வாய்ப்பு இல்லை. ஆகவே கிபி70க்கு முன்னரே வெளிப்படுத்துதல் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இயேசு சொன்னதை கவனியுங்கள்

லூக்கா 21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறும். அப்படி யென்றால் கிபி70கு முன்னரே எல்லாம் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொடரும்……......

Created By
Prabhu Antony
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.