இயேசுவின் வருகை எதற்கு?

இயேசுவின் வருகை எதற்கு என்று தெரியாவிட்டால் அவர் வருகையை சொல்லி பயப்படுகிறவர்காளாய் மாத்திரமே நாம் வாழ முடியும்.

அவர் வருகை உலகத்தை அழிக்க அல்ல. ( பழைய ஏற்ப்பாட்டின் யுகத்தை முடிவுக்கு கொண்டுவர)

புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. எபிரேயர் 8:13

அவர் வருகை உலகை நியாயம் திர்க்க அல்ல. ( அவர் சிலுவையில் மரித்த போதே உலகம் நியாதிர்ப்படைந்தது)

இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.

யோவான் 12:31-33

அவர் வருகை நம்மை பரலோகம் கொண்டு செல்ல அல்ல. ( நம்மோடு வாழாவே)

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:23

அப்படியென்றால் அவர் வருகை எதற்கு?

வெளிப்படுத்துதல் 21:2 - 3

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

இந்த இரண்டு வாக்கியங்களை கவனியுங்கள்….

“பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்”

“மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது”

ஆம், மனுஷர்களிடத்திலே வாசம் பன்னவே அவர் வருகிறார்.

இப்போழுது சொல்லுங்கள், அவர் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக வராமல் தாமதிப்பது நல்லதா அல்லது உடனே (முதல் நூற்றாண்டிலேயே) வருவது நல்லதா? வெளிப்படுத்துதளில் மட்டும் 13 முறைக்கு மேல் சிக்கிரம் என்ற வார்த்தை திரும்ப திரும்ப வருகிறது. ( 1:1, 1:19 , 2:10 , 2:10 , 3:2, 3:10 , 3:16, 6:11, 8:13, 10:4, 10:7, 12:4, 12:5, 17:8)

கிரேக்க மொழியில் Strong's Greek: 3195. μέλλω (melló) என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் about to happen. அதின் அர்த்தம் – உடனே, உடனடியாக, சிக்கிரத்தில், வெகு சிக்கிரத்திலே, சிக்கிரத்திலே சம்பவிக்கிற.

அவர் இரண்டாம் முறை வருவது எருசலேமில் வசிக்க அல்ல. இயேசு இரண்டாம் முறை வருவது மனுஷர்களிடத்திலே யுகயுகமாய் வாழவே.

நீங்கள் பாடும்போது இரங்கி வருவதும் நீங்கள் பாடி முடித்தவுடன் போய்விடுபவர் அவர் அல்ல. அதினால் தான் இரண்டாம் முறை அவர் வந்துவிட்டார் என்கிறோம்.

இன்றைக்கு தேவன் நம்மோடு வாசம் பன்னுகிறார் என்பது உன்மை என்றால் வெளிப்படுத்துதல் முழுவதும் நிறைவேறியிருக்க வேண்டும். இல்லையெனில் எல்லாம் பொய். அவர் என்னோடிருக்கிறார் என்பது மிக பெரிய கிறிஸ்தவர்களின் பொய்.

எதிர்காலத்தில் தான் இயேசு வருவார் என்றால் இப்பொழுது என்னொடிருப்பவர் இயேசு என்று எப்படி சொல்லமுடியும்?

ஆராதனை நேரங்களில் எதற்கெடுத்தாலும் ஆண்டவர் இரங்கி வருகிறார் என்று சொல்லுகிறோமே. எதை அடிப்படையாக வைத்து அப்படி சொல்லுகிறோம்?

அவர் இரண்டாம் வருகை நிறைவேறாமல் அவர் நம்மோடிருப்பதாக சொல்லுவது வெளிப்படுத்துதல் புஸ்தகத்தை அனேகர் புரிந்து கொள்ளாததினால் வந்த விளைவே.

இதை வாசியுங்கள்!

வெளிப்படுத்துதல் 21:2-3

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

கவனித்திர்களா?

வெளிப்படுத்துதலின் முடிவில் தான், தேவன் மனுஷர்களிடத்தில் வாசம் பன்னுகிறார் என்று வாசிக்கிறோம். அப்படியென்றால் இன்று தேவன் நம் நடுவில் இருக்கிறார் என்று சொல்லும்போது அவர் திரும்ப வந்திருக்க வேண்டுமே.

அப்படியென்றால் வெளிப்படுத்துதல் முழுவதும் நிறைவேறியிருக்க வேண்டுமே.

Created By
பிரபு ஆண்டனி
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.